LIOC எரிபொருள் விலை அதிகரிப்பு

4 years ago
Sri Lanka
(155 views)
aivarree.com

லங்கா ஐஓசி (LIOC) நிறுவனம் தமது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி ஒட்டோ டீசல் விலை லீற்றருக்கு 3 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றருக்கு 7 ரூபா வீதமும் அதிகரிக்கின்றன.

இதன்படி LIOC ஒட்டோடீசல் புதிய விலை 124/- ஆகவும், 92 LP பெற்றோல் புதிய விலை 184/- ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.

95 ஒக்டென் பெற்றோல் 3 ரூபாவால் அதிகரித்து 213/- வாக நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வருகிறது.