லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசம் அடைகிறது.

5 years ago
tamilnewsline.com

கொவிட் தொற்றின் காரணமாக இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் ஒருமாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்திய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு, வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட நிலையில் உள்ளார்.

அவரைத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் உடல்நிலை குறித்த அறிவிப்புகள் உடனடியாக வெளியிடப்படும் எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.