பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை கொழும்பு மருதானை நகரில் நடைபெற்றது.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மருதானையில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிஷாட் பதியுதீன் மற்றும் முஜிபுர் ரகுமான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேஷன், அரசியல் பிரமுகர் விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோருடன் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
