‘வீரமே வாகை சூடும்’ படம் வெளியாகவுள்ள புதிய திகதி

5 years ago
Entertainment
(95 views)
aivarree.com

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.  

யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்திய குடியரசு தினமான கடந்த 26ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் கொரோனா பரவல் காரணமாக இந்திய திரையரங்களை 50 சதவீத பார்வையாளர்களுடன் திறப்பதற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.