கோதுமா மா தட்டுப்பாடு /அரசாங்கத்தை வையும் வெதுப்பகத்தார்

4 years ago
Sri Lanka
(48 views)
aivarree.com

அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காததால் நாட்டில் கோதுமை மா ‘மாஃபியா’ ஒன்று உருவாகி இருப்பதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவுக்கு நிலவும் தட்டுப்பாட்டை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளமையை பயன்படுத்தி, சில வர்த்தகர்கள் அதியுச்ச விலைகளில் அதனை விற்பனை செய்கின்றனர்.

இதனால் பல வெதுப்பங்கள் மூடப்பட்டுள்ளன.

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு இன்று நேற்று உருவாகவில்லை – இது நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு போதுமானதாக இல்லை என்று அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

#The Morning