மின்சார கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

4 years ago
Sri Lanka
(108 views)
aivarree.com

மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் அதிகரிக்கப்படவில்லை.

தற்போது மின்சார சபை பல்வேறு வழிகளில் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

எனவே விரைவில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசாங்கம் இன்னும் இந்த விடயத்தில் தீர்மானம் எதனையும் அறிவிக்கவில்லை.