நல்லதண்ணியில் சிறுத்தை சடலம்

4 years ago
Sri Lanka
(66 views)
aivarree.com

நல்லதண்ணியில் நன்கு வளர்ந்த காட்டுச் சிறுத்தை ஒன்றின் சடலம் காயங்களுடன் வெள்ளிக்கிழமை (25) கண்டுபிடிக்கப்பட்டது.

நோர்டன்பிரிட்ஜ் – விமலசுரேந்திர நீர் மின் நிலையத்திற்கு செல்லும் வீதியில் உள்ள தனியார் காணியில் உள்ள தேயிலை தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை சடலம் காணப்பட்டது.

இது 8 வயதுடைய ஆண் சிறுத்தை எனவும், இறந்த சிறுத்தையின் தோலின் ஒரு பகுதியை அடையாளம் தெரியாத குழுவினர் வெட்டி எடுத்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சிறுத்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.