மலையகத்தில் ஒரே நாளில் 3 கோவில்கள் உடைப்பு

5 years ago
tamilnewsline.com

மலையக பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அக்கரபத்தனையின் இரண்டு ஆலயங்களில் உள்ள பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், டயகம பகுதியில் உள்ள ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 4 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நகைகளும், பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை.