பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் இணக்கம்!

4 years ago
World
(146 views)
aivarree.com

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பலாரசில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான இணக்கப்பாட்டை உக்ரைன் வெளியிட்டிருப்பதாக ரஷ்யாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் ரஷ்யா பரிந்துரைத்த போதும், அதனை உக்ரைன் மருத்திருந்தது.

எனினும் தற்போது அதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக ரஷ்யாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் உக்ரைன் பக்கத்திலிருந்து இது சம்பந்தமான உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இந்த நிமிடம் வரையில் வெளியாகவில்லை.

உடனுக்குடன் செய்திகளை வட்சப்பில் பெற்றுக்கொள்ள, கீழுள்ள Link ஐ தொட்டு, அய்வரி வட்சப் குழுவில் இணையுங்கள்.