சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் இறுதியாக தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது.
இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் வொசிங்டனுக்கு விஜயத்தை மேற்கொள்வார் என்றும் அங்கு IMF மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக அரசாங்கத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.
இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் IMF மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#சண்டேடைம்ஸ்
