பல்கலைக்கழக போலி அடையாள அட்டையுடன் யாழில் யுவதி கைது

4 years ago
Sri Lanka
(81 views)
aivarree.com

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் ஒரு யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாம் மருத்துவ பீட மாணவி என பொய் கூறி திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் குறித்த யுவதி தங்கி இருந்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் குறித்து வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து, கோப்பாய் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், அவர் மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனை கண்டறிது கைது செய்தனர்.