தனியாள் தரவு பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

5 years ago
tamilnewsline.com

தனியாள் தரவு பாதுகாப்பு சட்டமுலம் திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

சமூகவலைதளங்கள் மற்றும் ஊடகத்துறையில் தாக்கம் செலுத்தும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலம், ஊடக சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளையும் பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சட்டமூலம் தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் பல ஊடகவியாளர் சங்கங்களும் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன.

எவ்வாறாயினும் இது ஊடகவியலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.