பராக் ஒபாமாவுக்கு கொவிட் | மோடியின் டுவிட்

5 years ago
tamilnewsline.com

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

தமது டுவிட்டர் பதிவொன்றில் இதனை உறுதிப்படுத்தியுள்ள பராக் ஒபாமா, சிறிய தொண்டை வலியைத் தவிர வேறு பிரச்சினை எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.

தாம் முழுமையாக கொவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அவர் விரைவாக குணமடைய வாழ்த்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.