பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றும் ஆரம்ப அடியை வைத்துள்ளோம் / நாமல் டுவீட்

4 years ago
Sri Lanka
(64 views)
aivarree.com

பயங்கரவாத தடை சட்டத்தை தற்காலத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான ஆரம்ப அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள அவர், 1979ஆம் ஆண்டில் இருந்து தற்காலிக ஏற்பாடான இந்த சட்டம் நீண்டகாலம் இருந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள், இந்த சட்டத்தினை மாற்றியமைக்கும் ஆரம்ப அடியே அரசாங்கத்தால் எடுத்து வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.