பயங்கரவாத தடைச் சட்ட கைதிகள் 8 பேருக்கு பிணை

5 years ago
Sri Lanka
(111 views)
aivarree.com

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேரை வவுனியா மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்தது.


கைக்குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 பெண்கள் அடங்கலாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவுக்கு அமைய, அவர்களை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.


இதன்படி அவர்கள் எண்மரும் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

Reported by
Editorial Reporter