பணவீக்கத்தில் பெரும் வீக்கம் 

5 years ago
(75 views)
aivarree.com

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முதன்மைப் பணவீக்கமானது இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. (2021 – டிசம்பரில் 12.1 சதவீதம்)


கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 


உணவுப் பணவீக்கம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 22.1 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.


உணவல்லா பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 7.5 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 9.2 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.


உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் பணவீக்கம் தூண்டப்பட்டுள்ளது. 


– இலங்கை மத்திய வங்கி 

Reported by
Editorial Reporter