பசில் / வெள்ளிக்கிழமை இந்தியா விரைகிறார்

4 years ago
Sri Lanka
(56 views)
aivarree.com

நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ வரும் வெள்ளிக்கிழமை (25) இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

இலங்கைக்கு 1 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இறக்குமதி கடன் எல்லை வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் அங்கு செல்கிறார்.

ஏற்கனவே இந்தியா 900 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருள் இறக்குமதி கடன் எல்லை வசதியை வழங்கியுள்ளது.

இதற்கு முன்னரும் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியா சென்றிருந்தார்.

அதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முயற்சித்திருந்த போதும், அது கைகூடி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.