நிதி அமைச்சர் பசில் மீண்டும் இந்தியா விஜயம்

4 years ago
Sri Lanka
(35 views)
aivarree.com

நிதி அமைச்சர் பசில் மீண்டும் இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு இந்தியா 1.9 பில்லியன் டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு இணங்கி இருந்தது.

இதன்படி 900 மில்லியன் டொலர்கள் கடன் எல்லை வசதியாக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 1 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பசில் இந்தியா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இந்தியா சென்று திரும்பியமை குறிப்பிடத்தக்கது.