நாட்டை முடக்காது முன்செல்ல இடம்கொடுங்கள் / ஜனாதிபதி

4 years ago
Sri Lanka
(122 views)
aivarree.com

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த முக்கிய கருத்துகள்.

இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ள, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்து செயற்படுகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்துபவர்கள், பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். 

நாட்டை முடக்காமல் அரசாங்கத்தின் கொள்கைகளைச் செயற்படுத்த இடமளிப்பதே இன்றைய தேவையாக உள்ளது.