தொடரும் பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதி மீனவர் போராட்டம்

5 years ago
tamilnewsline.com

இந்திய மாணவர்களின் அத்துமீறலைக் கண்டித்தும் உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கோரியும் பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்களால் வீதியை மறித்து போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று காலை தொடர்புடைய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

இதற்கு ஏனைய மீனவ அமைப்புகளும் ஆதரவளித்து வருகின்றன.

Reported by
Editorial Reporter