இந்து மத தொழிலதிபர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்!

5 years ago
tamilnewsline.com

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சார்ந்த தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த மாகாணத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் சட்டன் லால் என்ற தொழிலதிபர் கொல்லப்பட்டுள்ளார்.

கோட்கி எனும் மாவட்டத்தில் கடந்த திங்கட் கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சிந்து மாகாணத்தில் கடந்த 30ஆம் திகதி பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reported by
Editorial Reporter