tamilnewsline

தலவாக்கலை மர முறிவும் ஆசிரியர் மரணமும் / கைதானவர்கள் பிணையில் விடுவிப்பு

தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் அண்மையில் அனுமதி பெறாமல் மரம் வெட்டியபோது, விபத்துக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 6 பேர் கைதாகி இருந்தனர்.

அவர்கள் அனைவரும் திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

ஆசிரியர் மரணத்துக்கு காரணமான சம்பவத்துக்கு நீதிகோரி லோகி தோட்ட மக்கள் திங்கள் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version