தலவாக்கலையில் இன மோதலை ஏற்படுத்த முயற்சியாம் | MP குற்றச்சாட்டு

4 years ago
Sri Lanka
(67 views)
aivarree.com

தலவாக்கலையில் இன மோதலை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக பாராளுமன்றஉறுப்பினர் ராதாகிருஷ்ணன் பாராளுமன்றில் குற்றம் சுமத்தினார். 

தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றைமாற்று இனத்தவர்கள் சுவீகரித்துள்ளனர். 

இது அங்கு இனரீதியான மோதலை தோற்றுவிக்கும் அபாயம் உள்ளது. 

இந்த பிள்ளையார் கோவில் நிரவாக பொறுப்பை தலவாக்கலை கதிரேசன்ஆலயத்திடம் கையளிக்க வேண்டும். 

90களில் அங்கு இடம்பெற்ற சம்வம்தான் நாட்டின் இனப்பிரச்சினைக்கு முக்கியகாரணமாக அமைந்தது என்பதை மறக்கக் கூடாது எனவும் ராதாகிஷ்ணன்சுட்டிக்காட்டினார்.