டொலர் பறிமாற்ற ஊக்கத்தொகை இனி இல்லை | மத்திய வங்கி திடீர் அறிவிப்பு

4 years ago
Sri Lanka
(142 views)
aivarree.com

நாணய மாற்று விகிதத்தில் நெகிழ்வுத்தன்மை அனுமதிக்கப்படுவதால், இதுவரை மத்தியவங்கி வழங்கி வந்த டொலருக்கான மேலதிக கொடுப்பனவை புதன்கிழமை முதல் இடை நிறுத்தியது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணத்தை மாற்றும்போது மத்திய வங்கி ஒரு US டொலருக்கு ரூ.8 ஊக்கத் தொகை வழங்கியது.

மேலும், வெளிநாட்டு நாணயத் தாள்களை மாற்றினால் 1 US டொலருக்கு ரூ.10 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

இவை இரண்டும் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வங்கி ஊடாக பணத்தை அனுப்பும் போது டொலர் ஒன்றுக்கு மேலதிகமாக 38 ரூபாய் வீதம் வழங்கப்படும் என அமைச்சரவை திங்களன்று தீர்மானம் எடுத்திருந்த நிலையில் மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.