“தம்மிக பெனி” கொவிட் மருந்தை கண்டுபிடித்தவரின் சகோதரர் கொவிடால் மரணம்

5 years ago
tamilnewsline.com

கொவிட் நோயை கட்டுப்படுத்துவதற்காக “தம்மிக்க பெனி” என்ற பெயரில் கேகாளையைச் சேர்ந்த தம்மிக பண்டார மருந்து ஒன்றை கண்டுபிடித்திருந்தார்.

அவர் இதனை அறிமுகப்படுத்தும் வகையில் மேற்கொண்ட செயற்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.

இந்தநிலையில் அவருடைய சகோதரர் ஒருவர் கொவிட் நோயால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

தம்மிக பண்டார கொவிட் மருந்தென கூறிய திரவம் ஒன்றை காளி அம்மனே அருளியதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.