தமது ஆட்சியில் ஏப்ரல்21 தாக்குதல் விசாரணைக்கு முன்னுரிமை / அனுரகுமார

4 years ago
Sri Lanka
(59 views)
aivarree.com

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும்போது ஏப்ரல் 21 தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இந்த விசாரணைகளை உரிய வகையில் மேற்கொள்ளவில்லை.

இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளையும் தாக்குதலை தவிர்க்க தவறியவர்களையும் சரியாக அடையாளம் காணவில்லை.

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி ஃபெர்ணாண்டோ ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியதுபோல, புதிய ஒரு அரசாங்கம் உருவனால் மாத்திரமே இது சம்பந்தமான சட்டங்கள் உரிய வகையில் அமலாக்கப்படும் என்பதையும் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்