தனி சிங்களத்தில் ரூபவாஹினி/ குவியும் கண்டனங்கள்

4 years ago
Sri Lanka
(85 views)
aivarree.com

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் உத்தியோகபூர்வ இலட்சினையில் தனி சிங்கள மொழியில் மாத்திரம் பெயர் பதிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 3 மொழிகளிலும் இருந்த இலட்சினை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினராலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய இலட்சினையை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள பெரும்பான்மை சமூகத்தினர் உள்ளிட்ட பலர் தமது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.