எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் (தமிழ் MP) வியாழக்கிழமை (24) இரண்டு வெவ்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
காணி அபகரிப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும், பாராளுமன்றத்துக்கு உள்ளும் அவர்கள் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி இருந்தார்கள்.
மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள சூழ்நிலையில் தமிழ் MPகள் இப்படி போராட்டம் நடத்தியது அரசாங்கத்தை அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாகி இருப்பதாக உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் அரசாங்கம், தமிழர் பிரச்சினையில் தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் பின்னடிப்பு செய்கிறது என்ற செய்தி சர்வதேசத்துக்கு போய்விடும் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உடனடியாக இந்த போராட்டம் சம்பந்தமான தெளிவுபடுத்தல் அறிக்கைகளை வெளியிடுமாறு அரசாங்கத்தின் முக்கிய தரப்புகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
