தனியார் பேருந்துகள் திங்கள் முதல் இல்லை? 

4 years ago
Sri Lanka
(291 views)
aivarree.com

இலங்கையில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் தங்களுக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால், திங்கட் கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடப் போவதில்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


1) எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்து பயணக் கட்டணங்களை அதிகரித்தல்.


அல்லது, 


2) பேருந்துகளுக்கான எரிபொருள் மானியத்தை வழங்குதல். 


ஞாயிற்றுக் கிழமை (13) முடிவதற்குள் இந்த இரண்டில் ஒன்று வழங்கப்படாவிட்டால், திங்களிலிருந்து பேருந்து சேவை இயங்காது என்று சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.