டொலர் விலை மேலும் கூடும் | 4 பில்லியன் டாலரை நாசமாக்கிய அரசாங்கம் | ஹர்ச டி சில்வா

5 years ago
tamilnewsline.com

அரசாங்கம் கடந்த ஆறு மாத காலமாக இலங்கை ரூபாவின் பெறுமதியை 200 ரூபாவாக பேணுவதற்கு 1.5 பில்லியன் டொலர்களை வீணடித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதைப்போன்று ரூபாவின் பெறுமதியை நிலையாக பேணியதன் காரணமாக, கிடைக்கவேண்டிய 2.5 பில்லியன் டொலர் நிதி கிடைக்காமல் போயுள்ளது.

இதன்மூலம் 4 பில்லியன் டொலர்களை அரசாங்கம் வீணடித்தள்ளது.

அதேநேரம் ரூபாவின் பெறுமதியை மிதப்பில் விட்டதன் மூலம் மத்திய வங்கி எதிர்பார்ப்பது போன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 230 ரூபாவாகவே நிலவாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.