ஜூலையுடன் காலாவதியாகும் தடுப்பூசிகள்

4 years ago
Sri Lanka
(141 views)
aivarree.com

இலங்கையிடம் கையிருப்பிலுள்ள கொவிட்-19 தடுப்பூசிகள், எதிர்வரும் ஜுலை மாதத்துடன் காலாவதியாகவுள்ளன.

தடுப்பூசி செலுத்தவேண்டிய மக்களுக்கான அளவு தடுப்பூசி தொகை மாத்திரம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதேவேளை இதுவரையில் 6.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பூரண தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற நடைமுறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளது.

பொதுமக்கள் பூரண தடுப்பூசி பெற்றவர்களா ?என்பதை அறிந்துகொள்ள செயலி ஒன்றையோ அல்லது அட்டை ஒன்றையோ அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.