ஜன நாயக பாதைக்கு திரும்புங்கள்/ புட்டினை கோரிய மோடி

4 years ago
World
(15 views)
aivarree.com

உக்ரைனில் தொடங்கிய வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்தார்.

உக்ரைன் இந்தியாவிடம் தலையீடு செய்யுமாறு அவசர வேண்டுகோள் விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபரை தொலைபேசியில் அழைத்து கலந்துரையாடினார்.

“ரஷ்யாவிற்கும் நேட்டோ படைக்கும் இடையிலான நீண்டகால வேறுபாடுகள் கௌரவமான மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர குழுக்கள் ஆர்வமுள்ள பிரச்சினைகள் குறித்து வழக்கமான தொடர்புகளை தொடர்ந்து பேணுவதற்கு இணங்கினர்” என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.