ஜனாதிபதி கோட்டா சர்வதேசத்துக்கு அனுப்பும் செய்தி

5 years ago
Sri Lanka
(112 views)
aivarree.com

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாகப் பல அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது.


பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல், மனித உரிமை மீறல் போன்ற விடயங்களால், இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இதனால் இலங்கைக்கு உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்ற நிலையில், இந்த அழுத்தங்களைச் சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் பதிலளித்துள்ளார். 


இதன்படி பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ப சீராக்கலை மேற்கொள்ளவும், வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்கவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற இடமளிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.


இது சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி விடுக்கும் செய்தி என்றே பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டா வேறு என்ன சொன்னார்?