ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேசத்துக்கான உரை | சுருக்கம்

4 years ago
(128 views)
aivarree.com

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை (16) இரவு தேசத்துக்கான உரை ஆற்றி இருந்தார். அதன் சுருக்கம் வருமாறு.

மிகவும் சவால் மிக்க தருணம் ஒன்றில் உங்களிடம் உரையாற்றுகிறேன். 

உங்களுக்கு இருக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு, மின்சார தடங்கல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற அனைத்து விடயங்களையும் நான் அறிந்து வைத்துள்ளேன்.

அதற்காகச் செய்யக்கூடிய பல விடயங்களைச் செய்தாலும், எமது கட்டுப்பாட்டை மீறிப் பல விடயங்கள் இன்னும் தொடர்கின்றன.

எனது செயற்பாடுகளுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.மக்களின் பிரச்சினையைத் தீர்க்க நான் இன்று கடினமான தீர்மானிக்க முடிவுகளை எடுக்க தலைப்பட்டுள்ளேன்.

அதற்காகத் தேசிய பொருளாதார சபை மற்றும் அதற்கான ஆலோசனை குழுவை நியமித்திருக்கிறேன். 

மக்களுக்காக நான் எடுக்கின்ற தீர்மானங்கள் குறித்து என்மீது நம்பிக்கை கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவம் முதல் பொதுமக்கள் வரையில் முகம் கொடுத்த சிக்கல்களைச் சாரியாக முகாமை செய்த எனக்கு மக்களின் பிரச்சினைகளையும் முகாமை செய்ய முடியும். 

கொவிட் பரவலால் விலை அதிகரிப்புகள் ஏற்படுகின்றமை எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது.

எமது நாட்டில் மட்டுமல்ல, முழு உலகத்திலும் பிரச்சினை இருக்கிறது.இந்த நெருக்கடி எவையும் என்னால் உருவாக்கப்பட்டவை இல்லை.

இந்த நெருக்கடியை உருவாக்கியவர்கள் இப்போது மக்கள் மத்தியில் அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் போது, நான் இந்த பிரச்சினையைத் தீர்க்கவே முயல்கிறேன்.

இப்போது இருக்கின்ற பிரச்சினைக்கு முக்கிய காரணம் எமது அந்நிய செலாவணி குறைபாடாகும். 

இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். இந்த வருடம் 22 பில்லியன் இறக்குமதி செலவு ஏற்படும். 

இதனால் 10 பில்லியன் டொலர் வர்த்தக இடைவெளி ஏற்படும். 

பல்வேறு ஏற்றுமதிகளால் 3 பில்லியன் டொலர்களும், வெளிநாட்டுப் பணியாளர்கள் ஊடாக 2 பில்லியன் டொலர்களும் கிடைக்கும்.

இதனால் 5 பில்லியன் டொலர் வர்த்தக இடைவெளியே இருக்கும்.

6.9 பில்லியன் டொலர் கடன் மற்றும் தவணைக் கொடுப்பனவு செலுத்த வேண்டியுள்ளது. 

எனவே 11.9 பில்லியன் இடைவெளி ஏற்படுகிறது.

2.5 பில்லியன் டொலர் முதலீடுகள் மற்றும் உதவிகள் கிடைக்கும்.9.4 பில்லியன் டொலர் முழுமையான பற்றாக்குறை நிலவியது.

ஆனால் ரூபாவை மிதப்பில் விட்டதன் காரணமாக ஏற்றுமதி வருமானம் 13 பில்லியனாக அதிகரிக்கும். 

இறக்குமதி செலவு 22ல் இருந்து 20ஆகக் குறைவடையும். 

எவ்வாறாயினும் வர்த்தக இடைவெளியை 7 பில்லியாகக் குறைத்துக் கொள்ள முடியும். 


சேவை ஏற்றுமதியாளர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருமானத்தின் ஊடாக வர்த்தக இடைவெளியை 2.4 பில்லியன் டொலர்களாக குறைக்க முடியும். 


இந்த இடைவெளியை போக்கவும், எமது அந்நியா செலாவணியைக் கூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 


அதற்காகச் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளோம்.

எமது நாட்டுக்கு ஒத்துப்போகும் வகையில் செயற்திட்டங்களை அமுலாக்க பல்வேறு தரப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. 


சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை இந்த நோக்கத்திலேயே இடம்பெற்றது. 

வருடாந்த கடன் தவணைத் தொகை மற்றும் பிணை முறிக்கான கொடுப்பனவுகளைச் செலுத்தும் முறைமை ஒன்றை உருவாக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி அதன் இலாப நட்டங்களை ஆராய்ந்து அவர்களுடன் தொடர்ந்து செயற்படுவதற்கு நான் தீர்மானித்தேன். 

கடந்த சில தீர்மானங்கள் இறக்குமதி செலவைக் குறைக்க முயன்றோம்.இதனை முன்கூட்டியே அறிந்ததன் காரணமாகவே வாகன இறக்குமதியை நிறுத்தினோம்.

தேசிய கைத்தொழிலை ஊக்குவித்தோம். அத்தியாவசியமற்ற விளைபொருட்களை உள்நாட்டிலேயே பயிரிட முயன்றோம். 
எரிபொருள் விலையே எமக்கு பெரும் பாதிப்பு.


இறக்குமதி செலவில் 20 சதவீதத்துக்கும் அதிக நிதி எண்ணெய்க்காகவே பயன்படுத்தப்படுகிறது. 

கடந்த சில மாதங்களில் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை 2 மடங்காக அதிகரித்திருப்பதுடன், நம்நாட்டில் மாத்திரம் எண்ணெய் விலை அதிகரிக்கப்படவில்லை.

அதற்காகவே புதுப்பிக்கத் தக்க சக்தியின் பாவனையை ஊக்கவிக்க முயற்சிக்கப்படுகிறது. 

சக்தி வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி மக்கள் பொறுப்புணர்வது செயற்பட வேண்டும். 


சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கின்றனர். 

வருமானம் அதிகரிக்கிறது. 


வரலாற்றில் பல இடங்களில் விழுந்து எழும்பியவர்கள் நாம். இலங்கையின் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச அமைப்புகளும் வரவேற்றன. 

தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் போது சில துன்பங்களுக்கு முகம் கொடுக்க நேரும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கையை இழக்காமல் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். 


எனது பதவிக் காலத்தில் இரண்டு வருடங்களை கொவிட் பரவலிலிருந்து பாதுகாக்கக் கழித்தேன்.

எஞ்சிய காலத்தை அடிப்படை நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவேன்.

பிள்ளைகளுக்குச் சிறந்த நாட்டை உருவாக்கவும், எம்மிடம் எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றவும் ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 

உங்கள் அழைப்பினாலேயே நான் அரசியலுக்கு வந்தேன்.

என்மீது வைத்த நம்பிக்கையை எப்போது உடைக்க மாட்டேன்.