இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக பணியாற்றிய பாரமி நிலேப்தா ரணசிங்க உடனமுலாகும் வகையில் பதவி நீக்கப்பட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாரமி தமது ஃபேஸ்புக் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவினால் தனக்கு ரூபவாஹினி வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரிவிதின அருணெல்ல, நுக செவன, சுசர தெஹன போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்களின் அன்பைப் பெற்ற அவர் ஒரு குரல் வழங்குபவரும் ஆவார்.
பரமி ரணசிங்கவின் பதவி நீக்கம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதுவரையில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
