காணாமல் போனோர் உறவினர்களுக்கு 100,000/- | அமைச்சரவை தீர்மானம்

4 years ago
Sri Lanka
(148 views)
aivarree.com

காணாமல் ஆக்கப்பட்டோரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு 100,000 ரூபாய் கொடுப்பனவு செலுத்த அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

இந்தப் பணமானது ஒரு முறை மாத்திரமே செலுத்தப்படும்.

அதேநேரம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் கண்டறியப்பட்ட மற்றும் பதிவாளர் நாயகத்தினால் “காணக் கிடைக்கவில்லை” என்ற சான்றிதழைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் அலி சப்ரி முன்வைத்திருந்தார்