கல்முனை உப பிரதேச செயலகம் | சாணக்கியனின் கோரிக்கைக்கு சமல் பதில்

4 years ago
Sri Lanka
(137 views)
aivarree.com

கல்முனை உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் வரையில் அங்கு தற்காலிகமாகவேனும் பதில் கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு இராசமாணிக்கம் சாணக்கியன் MP அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த விடயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை புதன்கிழமை கொண்டுவந்தார்.

அது மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன், நீண்ட காலமாக அங்கு வாழ்கின்ற 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுடைய கோரிக்கைக்கு அமைவாக விரைவாக அதனை தரம் உயர்த்துமாறும், அதுவரைக்கும் தற்காலிகமாக பதில் கணக்காளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த விடயம் குறித்து எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு ஆய்வு நடத்தி வருவதாகவும் அதன் அடிப்படையிலேயே தீர்வு வழங்கப்படும் எனவும் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் விரைவில் எந்த இனத்தவர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் சகல அதிகாரங்களும் கூடிய கல்முனை தமிழ் பிரதேச செயலகமாக அது தரம் உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.