கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 4 மணி முதல் 14 மணி நேர நீர்வெட்டு அமுலாகிறது.
நீர்வெட்டு அமுலாகும் பிரதேசங்கள்
ஏக்கல, கொட்டுகொட, கட்டுநாயக்க, சீதுவை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், மினுவாங்கொடையின் சில பகுதிகள்
காரணம்
ஜா-எல மார்க்கத்தின் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள்.
அமுலாகும் காலப்பகுதி
புதன் (09) பிற்பகல் 4 மணி முதல் வியாழன்(10) அதிகாலை 6 மணிவரையான 14 மணிநேரம்,
– தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
