எரிவாயு விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாது.

4 years ago
Sri Lanka
(134 views)
aivarree.com

எரிபொருள் விலை ஏற்றத்தை அடுத்து, எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற தகவல் கடந்த சில நாட்களாகவே வெளியாகி வருகின்றன.

தற்போதும் நாட்டில் மக்கள் எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் எரிவாயு விலை அதிகரிப்பது தவிர்க்க முடியாது என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாட்களில் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று, லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஏற்கனவே 835 ரூபா வீதம் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.