எரிபொருள் விலை / உதய கம்மன்பில சொல்லும் விளக்கம்

4 years ago
Sri Lanka
(40 views)
aivarree.com

எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் அமைச்சர் உதய கம்மன்பிலவை கோரி இருக்கிறது.

ஆனாலும் இது சம்பந்தமான எந்த தீர்மானமோ அல்லது கலந்துரையாடல்களோ மேற்கொள்ளப்பட வில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா – உக்ரேன் பரபரப்பு காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இருந்தாலும் ஏற்கனவே இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில் மீண்டுமொரு அதிகரிப்பை மேற்கொள்ளும் திட்டம் இல்லை என அவர் கூறினார்.