எரிபொருளை மறைத்து வைத்திருந்த எரிபொருள் நிலையம் சிக்கியது.

4 years ago
Sri Lanka
(148 views)
aivarree.com

மாத்தறை – டிக்வெல்ல பகுதியில் எரிபொருள் தாங்கி ஒன்றை வேறொரு இடத்தில் மறைத்து வைத்து, எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவித்த எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த எரிபொருள் நிலையத்துக்கு வந்த எரிபொருள் தாங்கி, வேறொரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் காவல்துறைக்கு முறைப்பாடு தெரிவித்தனர்.

இதனை அடுத்து குறித்த எரிபொருள் தாங்கியை கைப்பற்றிய காவல்துறையினர், அதனை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கொண்டுச் சென்று, எரிபொருளை விநியோகிக்க செய்துள்ளனர்.

குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.