ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் / கடை, வீடுகளுக்கு பலத்த சேதம்.!

4 years ago
Sri Lanka
(50 views)
aivarree.com

கிண்ணியா – பனிச்சங்குளம், செம்பிமோட்டை கிராமங்களுக்குள் ஞாற்றுக்கிழமை (13) இரவில் புகுந்த காட்டு யானைகள் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

சுமார் 6 – 7 யானைகள் பலசரக்கு கடையினையும், இரு வீடுகளையும் சுமார் 15க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் வாழை மரங்கள் முதலானவற்றை உடைத்தும், சேதப்படுத்தியும் உள்ளன.

இதனால் கடைக்காரரும், தென்னைச் செய்கையாளர்களும் தாங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்

அத்துடன் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த நெல்லை உட்கொண்டு வெளியில் வீசி சேதப்படுத்தியுள்ளன.

இரவில் தூங்க முடியாது பயமாக உள்ளதாகவும், யானைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோருகின்றனர்.