உறைந்த நிலையில் சடலங்கள்/துருக்கி எல்லையில் அவலம்

4 years ago
World
(59 views)
aivarree.com

துருக்கிக்கும் கீரீஸுக்கும் இடையிலான பிசாலா எல்லைப் பகுதியில் உறைந்த நிலையில் 12 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

ஆடைகள் களையப்பட்டு, காலணிகள் இல்லாத நிலையில் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிரீஸ் சட்டவிரோதமாக எல்லையில் குடியேறியவர்களை துருக்கிக்குள் மீண்டும் அனுப்ப முயற்சிப்பதே அவர்களின் மரணத்திற்கு காரணம் என துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் தெளிவான விடயங்கள் வெளிவராத நிலையில் கிரீஸும்துருக்கியும் இந்த விடயத்தில் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வருகின்றன.

Reported by
Editorial Reporter