உக்ரைன் – ரஷ்யா | பிந்திய 10 செய்திகளின் சுருக்கம்
news_editor
ரஷ்யாவின் எண்ணெய்க்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் தடை விதித்துள்ளன – ஹங்கேரி தடை விதிக்க மறுத்துள்ளது.
உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது – 861 பேர் காயம் – ஐ.நா
கார்க்கிவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரே நாளில் 27 பேர் கொல்லப்பட்டனர் – இந்த நகரில் மாத்திரம் இதுவரையில் 170 பொதுமக்கள் (5 சிறார்களும்) கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் சக்தி வளத்துக்குத் தடை விதிக்கும் தீர்மானத்துக்கு 5இல்4 அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவுக்கு எதிரான சண்டையில் கலந்து கொள்வதற்காக ஜோர்ஜியா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இராக்லி ஒக்ரோஷ்விலி, தன்னார்வ படையுடன் உக்ரைன் சென்றுள்ளார். (விரிவாக வாசிக்க)
உக்ரைனில் ரஷ்யா 61 வைத்தியசாலைகளைச் சேதமாக்கி இருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய்க்கு அமெரிக்கா வித்துள்ள தடையைப் பாராட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, இதன் மூலம் பலமான சமிக்ஞை ஒன்று உலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கு நகரான சுமியில் இருந்து 1700க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் உட்பட, 5000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கொக்காகோலா, பெப்சி, போன்ற நிறுவனங்களும் மெக்டொனால்ட்ஸ், ஐ.பி.எம். போன்ற நிறுவனங்களும் ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன.
ரஷ்யா, உக்ரைன் உடனான யுத்தத்தை மெதுவாகவோ வேகமாகவோ தோல்வியடையும் என்று அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களத்தின் துணை செயலாளர் நுலேண்ட் தெரிவித்துள்ளார்.