உக்ரைன் – ரஷ்யா / லேட்டஸ்ட் செய்தித்துளிகள்

4 years ago
World
(110 views)
aivarree.com

– ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பலாரசில் இடம்பெறுகிறது – யுத்த பிரதேசங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான வழியை உருவாக்குவது இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.

– உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மாரியூபோலை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படையினர் விரைவான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் – அந்த நகர் விரைவில் விழும் என கருதப்படுகிறது.

– பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை அவதானிக்கப்பட்டதை அடுத்து ரஷ்யாவுக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

– உக்ரைன் தலைநகர் கீயவை இன்னும் ரஷ்யா கைபற்ற வில்லை என்றாலும், அங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

– மூன்றாவது உலகப்போர் அணு ஆயுதங்களைக் கொண்டு அமையும் – ஆனால் அது எங்களின் சிந்தனை அல்ல என ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோ கூறியுள்ளார்

– உக்ரைனை சீக்கிரத்தில் ராணுவம் சூனிய நாடாக மாற்றுவேன் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனிடம் கூறியுள்ளார் – அதேநேரம் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தாமதிக்கும் ஒவ்வொரு நாளிலும் நிபந்தனைகள் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்சன் நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து ரஷ்ய படையினர் அங்கு பொதுமக்களுக்கான குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை துண்டித்து உள்ளனர்.