உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யா

5 years ago
tamilnewsline.com

ரஷ்யாவின் ஆதரவு துணை இராணுவ படையினர் கியவ் என்ற உக்ரைன் தலைநகரை நெருங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கியவிலில் இருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தற்போது அன்டனோவ் விமான தளத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அவர்களை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக உக்ரைன் துருப்பினர் அறிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் படையினர் உக்ரைனின் வடக்கு மற்றும் தெற்கில் இருந்து துரிதமாக முன்னெறி செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.