உக்ரேனில் உள்ள இலங்கையர் நிலை என்ன?

4 years ago
Sri Lanka
(39 views)
aivarree.com

உக்ரேனில் உள்ள இலங்கையர்களை அவசரநிலை ஏற்பட்டால் வெளியேற்ற தயார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

உக்ரைன் நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது உக்ரேனில் சுமார் 40 இலங்கையர்கள் உள்ளனர்.

அவர்களில் 07 பேர் மாணவர்கள்.

உக்ரேனில் இலங்கைத் தூதரகம் இல்லாத நிலையில், துருக்கியில் உள்ள தூதரகம் உக்ரைன் நடவடிக்கைகளையும் பார்த்துக்கொள்கிறது.