டொலர் தட்டுப்பாட்டால் பல கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்ற நிலையில், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது.
பெரிய கப்பல்களுக்கு அப்பால், குறுந்தூர துறைமுகங்களுக்கு இடையிலான சிறியளவான கொள்கலன்களை பரிமாற்றும் தரப்பினர், துறைமுக கொடுப்பனவு தொடர்பாக சிக்கலை எழுப்பியுள்ளனர்.
தற்போது அவர்களது கட்டணங்களை அதன் செயற்படுத்துனர்கள் (Feeder operators) கையாளுகின்றனர்.
எனினும் அதனை நேரடியாக கையாள அனுமதிக்காத பட்சத்தில் மார்ச் 1 முதல் சேவையை முன்கொண்டு செல்ல முடியாது என, பாரிய கப்பல் கொள்கலன் சேவை அல்லாத பரிமாற்றாளர்கள் (Non vassal operating common carriers- NVOCCs) கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
இதனால் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து அந்த நாடுகளுக்குமான கொள்கலன் பரிமாற்றம் பாதிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
Daily FT
