டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபடுவதற்கான இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்தில் இருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
வீரர்களை மொஹாலி மைதானத்தில் இருந்து ஹோட்டெலுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாக சோதனையில் ஈடுபட்ட வேளையில் இவை மீட்கப்பட்டன.
சண்டிகார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் 4 முதல் 8 வரை நடைபெறும்.
#இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
