இன்றும் மின் விநியோகம் தடைபடுமா?

5 years ago
tamilnewsline.com

பல மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாளாந்த மின் விநியோகம் இன்றும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால், தேசிய மின்கட்டமைப்பு 360 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும் என்பதோடு இன்றும் தடைபடும் அபாயம் உள்ளது.

போதியளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவிக்கிறது.

Reported by
Editorial Reporter